Advertisement

சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 11 Dec 2020 3:27:10 PM

சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி ?

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன. சாமை அரிசியில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு (மிளகு 8-10)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - ஒரு துண்டு
தண்ணீர் - 450 மில்லி.
முந்திரி - 3

venpongal,taro rice,millet,veg recipe ,வெண்பொங்கல்,சாமை அரிசிe, தினை, காய்கறி சமையல்

செய்முறை :

முதலில் நன்கு கழுவி சுத்தம் செய்த சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு, தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

அதன்பின் இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்க சுவையான சாமைப் பொங்கல் தயார்.

Tags :
|