Advertisement

தர்பூசணி புதினா மியூல் செய்வது எப்படி?

By: Monisha Tue, 15 Sept 2020 10:19:47 AM

தர்பூசணி புதினா மியூல் செய்வது எப்படி?

வெயில் காலத்தில் இதமளிக்கும் தர்பூசணி புதினா மியூல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
தர்பூசணி - 6 துண்டுகள்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டிகள் (தூளாக்கியது)
லைம் ஜூஸ் - 10 மிலி
புதினா - 6 இலைகள்

செய்முறை
1. தர்பூசணி பழத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

2. இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து மிருதுவாகும் வரை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. இந்தக் கலவையை நன்றாக வடித்துக்கொள்ளவும்.

4. வேண்டுமென்றால் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம்.

5. குளிர்வித்து பரிமாறவும்.

Tags :
|
|