Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிரீக் சாலட்டை தயார் செய்வது எப்படி?

By: Monisha Tue, 22 Sept 2020 09:46:38 AM

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிரீக் சாலட்டை தயார் செய்வது எப்படி?

உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கிரீக் சாலட்டை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் ஒவ்வொன்றும் 10 கிராம்
சிவப்பு வெங்காயம் 20 கிராம்
ஐஸ் பெர்க் லெட்டூஸ் 10 கிராம்
வெள்ளரி 10 கிராம்
ஃபெட்டா சீஸ் 05 கிராம்
கலமாட்டா ஆலிவ்கள் 04
ஆலிவ் ஆயில் 50 மிலி
உடைத்த கரு மிளகு 05 கிராம்
வினிகர் 10 மிலி

டிரெஸ்ஸிங் செய்ய
1. ஒரு பாத்திரத்தில், ஆலிவ் ஆயில், வினிகர் மற்றும் கடுகு ஆகியவற்றை கலக்கவும், அதில், வினிகர் மற்றும் ஆலிவ் ஆயிலை சேர்த்து எமல்சிஃபை செய்யவும்.

2. உப்பு, மிளகு சேர்த்து இதை சீசன் செய்யவும்.

சாலட் செய்ய
3. சிவப்பு வெங்காயம், சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய்கள், வெள்ளரி ஆகியவற்றை சிறிய சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

4. எல்லா காய்கறிகள், ஐஸ் பெர்க் லெட்யூஸ், கலமாட்டா ஆலிவ்களுடன் டிரஸ்ஸிங்கை சேர்த்து கலக்கவும்.

5. ஃபெட்டா சீஸை நொறுக்கி, அதை சாலட் மேல் தூவவும்.

Tags :