Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் குழம்பு செய்முறை

By: Nagaraj Sun, 17 July 2022 11:24:49 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் குழம்பு செய்முறை

சென்னை: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது பாகற்காய். இதில் குழம்பு செய்து பாருங்கள். அதன் செய்முறை உங்களுக்காக.

தேவையானவை: மிதி பாகற்காய், சின்ன வெங்காயம் - தலா அரை கப், பூண்டு - 4 பல், தக்காளி - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய்ப்பால் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள், உப்பு - தேவையான அளவு,

turmeric powder,chilli powder,curry powder,cantaloupe,oil ,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, பாகற்காய், எண்ணெய்

செய்முறை: மிதி பாகற்காயை காம்பு நீக்கி கழுவி, இரண்டாக நறுக்கி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு பொடி, வேக வைத்த பாகற்காய் போட்டு மறுபடியும் வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

Tags :