Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:09:03 AM

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல்

சென்னை: குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்த பச்சைப்பயறு குதிரைவாலி பொங்கல் செய்து தாருங்கள்.

தேவையானவை

பச்சைப்பயறு - 100 கிராம்
குதிரைவாலி - 200 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 5 டம்ளர்
முந்திரி - 20
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 75 கிராம்

green beans,horseradish,salt,ginger powder,immunity ,பச்சைப்பயறு, குதிரைவாலி, உப்பு, இஞ்சித் துருவல், நோய் எதிர்ப்பு

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு பச்சைப்பயற்றை வறுத்துக்கொள்ளவும். பின்னர் குக்கரில் 5 டம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்கும்போது வறுத்த பச்சைப்பயறு, குதிரைவாலி, உப்பு, இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து குக்கரை மூடி, வெயிட் போட்டு இரண்டு (அ) மூன்று விசில்விட்டு அடுப்பை நிறுத்தவும்.


பின்பு சிறிய கடாயில் மீதமுள்ள நெய்விட்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத்தூள், முந்திரி சேர்த்து வறுத்து குக்கரில் உள்ள பொங்கலில் கலக்கவும்.பலன்கள்: பச்சைப்பயிறிலும் குதிரைவாலியிலும் நிறைந்துள்ள புரதச்சத்து உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.


மேலும் குதிரைவாலியில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தைப் பெருக்கும். எலும்புகளை வலுவாக்கும். மிளகின் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

Tags :
|