Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்

By: Nagaraj Thu, 16 Nov 2023 10:09:58 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் எலுமிச்சை காய்கறி சூப்

சென்னை: உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் எலுமிச்சை கொத்தமல்லித்தழை காய்கறி சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:
பால் - கால் கப்கேரட் - ஒன்றுபீன்ஸ் - 10பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் - 10இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 2 பல்மிளகுத்தூள், சீரகத்தூள் -தலா கால் டீஸ்பூன்பட்டை - சிறிய துண்டுகொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடிஎலுமிச்சைப்பழம் - ஒன்று(சாறு எடுக்கவும்)உப்பு - தேவைக்கேற்பவெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

milk,carrots,beans,green peas,chives ,பால், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, சின்ன வெங்காயம்

செய்முறை: குக்கரில் வெண்ணெயை சூடாக்கி பட்டை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், காய்கறிகள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். தேவைக்கேற்ப நீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் நீரை வடிகட்டி ஆறவிடவும். பிறகு, வெந்த காய்கறிகளை தேவையான அளவு நீர் விட்டு மையாக அரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் காய்கறிகள் வெந்த நீரையும், வேகவைத்து அரைத்து வடிகட்டிய நீரையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்ததும் பால் சேர்க்கவும். சூப் பதம் வந்ததும் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

விருப்பப்பட்டால் க்ரீம் சேர்க்கவும். குளிர்காலத்தில் நோய் அண்டாமல் தடுக்கும், வைட்டமின்-சி நிறைந்த சூப் இது.

Tags :
|
|