Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கலவை தானிய உருண்டை

By: Nagaraj Mon, 12 Sept 2022 8:51:04 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கலவை தானிய உருண்டை

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் கலவை தானிய உருண்டையை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள்.

தேவையானவை: கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, பொட்டுக்கடலை, எள் - தலா கால் கப், சர்க்கரை - இரண்டரை கப் (பொடித் துக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், நெய் - அரை கப்.

rye,kallu,green lentils,caramani,wheat,round ,
கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு, காராமணி, கோதுமை, உருண்டை

செய்முறை: தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.

தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துரு வல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்). புரோட்டீன் சத்து நிறைந்த பலகாரம் இது. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

Tags :
|
|
|