Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முடக்கற்றான் சோளம் தோசை

By: Nagaraj Thu, 15 June 2023 08:41:19 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முடக்கற்றான் சோளம் தோசை

சென்னை: உடலில் உள்ள பல நோய்களுக்கு தீர்வை அளிக்கும் முடக்கற்றானில் தோசை செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதனுடன் சோளமும் சேர்த்துக் கொண்டால் இன்னும் கூடுதல் ஆரோக்கியம்தானே. இதோ உங்களுக்காக முடக்கற்றான் சோள தோசை செய்முறை.

தேவையானவை:
முடக்கற்றான் கீரை – 1 கைப்பிடிநாட்டுச் சோளம் – 1 கிலோஉளுந்து – 200 கிராம்எண்ணெய் – தேவையானவைசின்ன வெங்காயம் – 4மிளகு – அரை தேக்கரண்டிபூண்டு – 2 பல்.

corn,gram,pepper,garlic,onion,spinach ,சோளம், உளுந்து, மிளகு, பூண்டு, வெங்காயம், முடக்கற்றான் கீரை

செய்முறை: நாட்டுச் சோளத்தையும், உளுந்தையும் எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து நைஸாக அரைக்கவும். பிறகு, முடக்கற்றான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வாணலியில் வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து வதக்கி, மிக்ஸில் அரைத்து சோளமாவுடன் கலந்து, தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தோசையாக ஊற்றி எடுத்தால், முடக்கற்றான் தோசை தயார்.

Tags :
|
|
|
|
|