Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வெள்ளை எள்ளு உருண்டை செய்முறை

By: Nagaraj Tue, 06 Dec 2022 09:56:51 AM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் வெள்ளை எள்ளு உருண்டை செய்முறை

சென்னை: எலும்புகளை வலிமைப்படுத்தும் வெள்ளை எள்ளு உருண்டை செய்து கொடுங்கள். குழந்தைகள் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் – 3 கப்
சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் – 6
நெய் – சிறிதளவு

sesame seeds,sugar,cardamom,ghee,water ,எள், சர்க்கரை, ஏலக்காய், நெய், தண்ணீர்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும் .சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் .

Tags :
|
|