Advertisement

இரும்புச்சத்துக்கள் கொண்ட முருங்கைப்பூ முட்டைப் பொரியல்

By: Nagaraj Sun, 27 Sept 2020 11:39:44 AM

இரும்புச்சத்துக்கள் கொண்ட முருங்கைப்பூ முட்டைப் பொரியல்

முருங்கைப்பூவானது அதிக அதிகளவில் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இந்த முருங்கைப்பூவில் சுவையான முட்டை பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு
முட்டை - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு

cumin,green chillies,curry leaves,onions,drumsticks ,சீரகம், பச்சை  மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், முருங்கைப்பூ

செய்முறை: முருங்கைப்பூ அலசிக் கொள்ளவும், அடுத்து பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

அடுத்து முருங்கைப்பூ, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். முருங்கைப்பூ வெந்தபின்னர், முட்டையை உடைத்து ஊற்றி முட்டை வெந்ததும் இறக்கினால் முருங்கைப்பூ முட்டை பொரியல் ரெடி. அருமையான சுவை மட்டுமின்றி குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் உயர்த்தும்.

Tags :
|
|