Advertisement

இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்கீரை துவையல்

By: Nagaraj Sat, 26 Nov 2022 1:21:31 PM

இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்கீரை துவையல்

சென்னை: இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை துவையல் செய்வோமா. முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் துளிர் முருங்கைக் கீரை - 1 கப் உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - 8 புளி - நெல்லிக்காய் அளவு வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு பூண்டு - 5 பல் கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க எண்ணெய் - 1 டீஸ்பூன்

spring greens,urad dal,dry chillies,tamarind,onion,garlic ,துளிர் முருங்கைக் கீரை, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, வெங்காயம், பூண்டு

செய்முறை: முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.


வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும். இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Tags :
|