Advertisement

இட்லி, புரோட்டாவுக்கு செம சைட்டிஷ் தக்காளி கார சால்னா

By: Nagaraj Mon, 21 Nov 2022 09:52:30 AM

இட்லி, புரோட்டாவுக்கு செம சைட்டிஷ் தக்காளி கார சால்னா

சென்னை: தக்காளி கார சால்னா செய்து இருக்கீங்களா. இப்போ செய்து பார்ப்போம். ருசியில் உங்கள் குடும்பத்தினர் அசந்துதான் போய்விடுவார்கள்.

தேவையானவை:

தக்காளி – 3, பெரிய வெங்காயம் – 1
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
கிராம்பு – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
இஞ்சி – 1/4 இன்ச்
பூண்டு – 5 பல்
பட்டை – சிறிது
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கசகசா – 1 டீஸ்பூன்

cumin,taniya,bark,cloves,anise,poppy,cardamom,tomato ,சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, ஏலக்காய், தக்காளி

செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், தனியா, பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, ஏலக்காய் சேர்த்து வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேங்காய்த்துருவல் போட்டு வதக்கி இறக்க வேண்டும். ஆறியதும் நைசாக அரைக்கவும்.

கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து குழம்பைக் கொதிக்க விடவேண்டும். நன்கு கொதித்ததும் கொத்தமல்லியை தூவி இட்லி, பரோட்டாவுடன் பரிமாறவும்.

Tags :
|
|
|
|
|
|