Advertisement

வித்தியாசமான ருசியில் பலாப்பழத்தில் ஊறுகாய் செய்முறை

By: Nagaraj Mon, 07 Nov 2022 11:02:09 PM

வித்தியாசமான ருசியில் பலாப்பழத்தில் ஊறுகாய் செய்முறை

சென்னை: பலாப்பழத்தில் சுவையான ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பலாப்பழம் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறுப்பு சீரகம் – 1 1/2 டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பிளாக் சால்ட்- 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – 125 கிராம்
உப்பு – தேவைக்கேற்ப.

black salt,black cumin,turmeric powder,jackfruit,pickles ,பிளாக் சால்ட், கருப்பு சீரகம், மஞ்சள் தூள், பலாப்பழம், ஊறுகாய்

செய்முறை: முதலில் பலாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் 2 மணி நேரம் காயவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.


பின் கடுகு எண்ணெயைக் காயவைத்து, இதனுடன் கடுகு, வெந்தயம், மிளகாய்த்தூள், பிளாக் சால்ட், கறுப்பு சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் பலாப்பழ துண்டுகள், உப்பு சேர்த்து பிரட்டினால் சுவையான பலாப்பழ ஊறுகாய் தயார்!!

Tags :