Advertisement

வெல்லம் பிடி கொழுக்கட்டை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 21 July 2022 7:30:44 PM

வெல்லம் பிடி கொழுக்கட்டை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: விநாயகர் சதுர்த்தி வரப்போகுது. அதற்குள் வெல்லம் பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தினரை அசத்துங்கள். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – இரண்டு கப்வெல்லம் – ஒன்றை கப்ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்தண்ணீர் – நான்கு கப்தேங்காய் – தேவைக்கேற்ப

sweet,pudding,coconut,jaggery,bitter rice ,இனிப்பு, கொழுக்கட்டை, தேங்காய், வெல்லம், பச்சரிசி

செய்முறை:பச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் மாவு, தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, கொள்ளவும்.

ஆறியதும், இட்லி பாத்திரத்தில் கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைத்து 15 நிமிடம் ஆவி கட்டி கொழுக்கட்டை வேகவைத்து வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

Tags :
|