Advertisement

குஸ்கா டேஸ்ட்டா இருக்க இந்த ஒரு பொருளை சேருங்கள் போதும் டேஸ்ட் அல்லும்

By: vaithegi Thu, 03 Aug 2023 2:43:25 PM

குஸ்கா டேஸ்ட்டா இருக்க இந்த ஒரு பொருளை சேருங்கள் போதும் டேஸ்ட் அல்லும்

நம் வீடுகளில் கடைகளில் வாங்கும் பிரியாணிகளில் என்ன தான் சுவை மிகுதியாக இருந்தாலும் கூட, பாய் வீடுகளில் செய்யும் பிரியாணிக்கு என தனியாக ஒரு மணமும் ருசியும் இருக்கும். இதற்கு அவர்கள் சேர்க்கும் மசாலாக்களும் ஒருவித காரணம் தான்.வாங்க அது என்னவென்று பார்ப்போம்

செய்முறை:

இந்த குஸ்கா செய்ய 2 கப் பாஸ்மதி ரைஸ் 2 முறை தண்ணீர் ஊற்றி கழுவியப் பிறகு அரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து 2 பெரிய வெங்காயத்தை மெல்லிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் 2 பெரிய சைஸ் தக்காளியை மெலிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குஸ்கா தாளிக்க அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் 1 பட்டை, இரண்டு ஏலக்காய், 2 லவங்கம், பிரியாணி இலை 2 என அனைத்தையும் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயம் 1 கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

அடுத்து இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் சேர்த்து அதையும் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளி, 2 பச்சை மிளகாயும் கீரி சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதங்கி விடுங்கள். அதன் பிறகு 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி, கைப்பிடி அளவு புதினா இரண்டையும் சேர்த்த பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா என்று அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

cuzca,taste ,குஸ்கா ,டேஸ்ட்


இதன் பிறகு கால் கப் அதிகம் புளிக்காத தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இந்த சமயத்தில் 5 முந்திரிப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக அரைத்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குஸ்காவுக்கு நல்ல சுவையையும் ஒரு கிரீமிப்பதமான ஸ்ட்ரக்சரையும் தரும். தயிர் புளிப்பு குறைவாக இருந்தால் எலுமிச்சை பழத்தை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் தேவையில்லை. இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு 2 கப் அரிசிக்கு நான்கு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள்.

இச்சமயத்தில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு ஊற வைத்து அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து இதில் சேர்த்து கலந்து விட்டு பத்து நிமிடம் வரை மூடி போட்டு வேக விடுங்கள். அதன் பிறகு இந்த குஸ்காவை தம் போட வேண்டும். அதற்கு ஒரு தவாவை வைத்து நன்றாக சூடான உடன் குஸ்கா செய்த பாத்திரத்தை அதன் மேல் வைத்து அதன் மேல் மூடியை இறுக்கமாக மூடி மேலே ஒரு பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் அப்படியே விட்டு அனுப்பி விடுங்கள். அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்த பிறகு பாத்திரத்தின் மூடியை திறந்து மேலே லேசாக நெய் ஊற்றி 1 முறை நன்றாக கலந்து பரிமாற வேண்டியது தான். பாய் வீட்டு குஸ்கா நல்ல கமகமவென்று வாசித்துடன் தயார்.

Tags :
|