Advertisement

கடலைப் பருப்பில் புட்டு செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 22 July 2022 4:05:44 PM

கடலைப் பருப்பில் புட்டு செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: கடலைப் பருப்பில் புட்டு செய்து உள்ளீர்களா. குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த இதை செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி : 2 கப்சக்கரை : 1 கப்தேங்காய்ப்பூ : 1 கப்கடலைப்பருப்பு : கப்நெய் : டீஸ்பூன்உப்பு : தேவையான அளவு

groundnut,pudding,cardamom,sugar,coconut,cashew ,கடலைப்பருப்பு, புட்டு, ஏலக்காய், சர்க்கரை, தேங்காய், முந்திரி

செய்முறை:முதலில் அனைத்து பருப்புக்களையும், அரிசியையும் நீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசி மற்றும் பருப்புக்களை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள மாவை இட்லி குழியில் ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெந்துள்ள பருப்பு இட்லியை நீர் தெளித்து எடுத்து, புட்டு போன்று உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அதில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து சர்க்கரை பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதில் வேக வைத்து உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் துருவிய தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் பவுடர் மற்றும் வறுத்த முந்திரியையும் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்கினால், சுவையான பருப்பு புட்டு தயார்.

Tags :
|