Advertisement

செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம்

By: Nagaraj Wed, 13 July 2022 4:10:25 PM

செட்டிநாட்டு விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு பாலன்னம்

சென்னை: மென்மையான, வெண்ணை போன்ற சுவையும், நிறமும் கொண்ட கல்கண்டு சாதம் பெரும்பாலும் கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுவது வழக்கம். செட்டிநாட்டு விருந்துகளிலும் இது சிறப்பாக பரிமாறப்படும். குழந்தைகள் விரும்பி உண்ணும் இந்த கல்கண்டு பாலன்னம் அன்றாடம் செய்து கொடுக்கலாம்.
இதில் பால், பருப்பு, கல்கண்டு, ஏலக்காய், முந்திரி போன்ற சுவையான, மற்றும் சத்து நிறைந்த பொருட்கள் உள்ளடங்கியதால், இது ஆரோக்கியம் நிறைந்த ஒரு முழு உணவாகும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கோப்பைகல்கண்டு – 1 கோப்பை (பொடித்தது)பாசிப்பருப்பு -1/4 கோப்பை (மலர வேகவைத்தது) விருப்பத்திற்கேற்ப பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்.பால் -1 1/2 கோப்பைதண்ணீர்-1 1/2 கோப்பைமுந்திரி அல்லது பாதாம்-5 அல்லது 9ஏலக்காய் பொடி -1/2 தேக்கரண்டிநெய்-2 மேஜைக்கரண்டி

tamarind,cashew nut,alfalfa,milk,cardamom powder ,பச்சரிசி, முந்திரிபருப்பு, பாசிப்பருப்பு, பால், ஏலக்காய் பொடி

செய்முறை:பாசிப்பருப்பை 1 விசில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி, மேலே குறிப்பிட்டுள்ள பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 அல்லது 5 விசில் குக்கரில் வேகவிடவும்.

சூடு தணிந்ததும், பொடித்த கல்கண்டு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலக்கவும், அடிபிடிக்காமல், இளந்தீயில் வைத்து கிளறிவிடவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து கலவையுடன் சேர்க்கவும், ஏலக்காய் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். அருமையான ருசியில் செட்டிநாடு சுவையில் கல்கண்டு பாலண்ணம் தயார்.

Tags :
|