Advertisement

செட்டிநாட்டு உணவில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு வடை செய்முறை

By: Nagaraj Wed, 13 July 2022 4:10:52 PM

செட்டிநாட்டு உணவில் முக்கிய இடம் பிடிக்கும் கல்கண்டு வடை செய்முறை

சென்னை: இனிப்பில் பல வகையுண்டு வடையிலும் பல உண்டு. அந்த வையில் கல்கண்டு வடை தோற்றம் நகரத்தார்கள் வாழும் செட்டிநாட்டில். உணவு வகைகளில் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள் பெருமைக்குரியது. அசத்தும் சுவைகொண்ட இந்த கல்கண்டு வடை முக்கிய விருந்துகளில் சிறப்புப் பலகாரமாக பரிமாறப்படும்.

தேவையான பொருட்கள்
உளுந்து-1 கோப்பை- (110 கிராம் அல்லது அரை உலக்கு)பச்சரிசி 1/4 கோப்பைகல்கண்டு- 3/4 கோப்பைஉப்பு ஒரு சிட்டிகைஎண்ணெய் – வடை பொரித்தெடுக்க-250 மில்லி துவரம் பருப்பு 1 தே .க

kalkandu vada,salt,gram flour,tamarind ,கல்கண்டு வடை, உப்பு, உளுந்து, பச்சரிசி

செய்முறை:கல்கண்டைத் தட்டி தூளாக்கி கொள்ளவும், அல்லது அச்சு கல்கண்டும் பயன்படுத்தலாம். உளுந்தையும், அரிசியையும் அளந்து, நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஆட்டுரலில் போட்டு அரைக்கவும், சிறிது கூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீருக்கு பதிலாக பொடித்த கல்கண்டை இடை இடையே சேர்த்து அரைக்கவும். நல்ல பந்து போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.

மாவை சிறு சிறு வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவுடவும். சுவை மிகுந்த கல்கண்டு வடை தயார். இனிப்பு சேர்த்துள்ளதால் தீ குறைவாக வைத்து வேகவிடவும், இல்லையேல் வடை சிவந்து விடும். வடையை சிறிதாகத் தட்டவும் இந்த வடை உப்பி பெரிதாக வரும். உப்பை அரைத்து எடுத்த பிறகு சேர்த்துக்கலக்கவும் ஆட்டும் போது சேர்க்க வேண்டாம்.

Tags :
|