Advertisement

சளியை கரைக்கும் கொள்ளு சூப் செய்முறை

By: Nagaraj Thu, 19 Jan 2023 1:02:48 PM

சளியை கரைக்கும் கொள்ளு சூப் செய்முறை

சென்னை: சளியை கரைக்கும் கொள்ளு சூப் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அசைவ உணவுகளின் மூலம் கிடைக்கும் உயர்தர புரதத்தை அதிகமாக கொடுக்கக்கூடிய ஒரே தானியம் கொள்ளு. கொழுப்பைக் கரைப்பதிலும் கொள்ளுதான் முதலிடம். அதுமட்டுமல்லாமல், குளிர்காலத்தில் தொல்லை தரும் சளியை கரைக்க மிகவும் உதவுவது கொள்ளு சூப். இந்த கொள்ளு சூப் எப்படி வைக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை:
கொள்ளு - 2 டீஸ்பூன்மிளகு, சீரகம்,பெருங்காயப்பொடி - தலா அரை ஸ்பூன்பூண்டு - 2 பல்தக்காளி - 1கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதுமஞ்சள் பொடி, - சிறிதுநல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்உப்பு - தேவைக்கு

kallu soup,aloe vera powder,garlic,immunity,cold ,கொள்ளு சூப், பெருங்காயப்பொடி, பூண்டு, நோய் எதிர்ப்பு, சளி

செய்முறை: கொள்ளு, மிளகு, சீரகம், பூண்டு, தக்காளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து இரண்டு டம்ளர் நீரில் கரைத்து, மஞ்சள் தூள் பெருங்காயப்பொடி நல்லெண்ணெய், உப்பு கலந்து கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்ததும் இறக்கி வைக்கவும். சுவையான கொள்ளு சூப் ரெடி. இது சளி, இருமலை போக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|