Advertisement

காயல் இனிப்பு ஊறுகாய் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 21 Sept 2022 9:33:19 PM

காயல் இனிப்பு ஊறுகாய் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: காயல் இனிப்பு ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். ருசி பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 4
பச்சை மிளகாய் -1
காயல் கலவை மசாலாதூள் – 2 தேக்கரண்டி
வெல்லம் -200 கிராம்
சீனி -2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு – கடுகு, உளுந்து, கருவேப்பிலை

ugra,mango,cardamom,jaggery,oil ,உளுந்து, மாங்காய், கருவேப்பிலை, வெல்லம், எண்ணெய்

செய்முறை: மாங்காயை கழுவி சுத்தம் செய்த பின் அதைசிறு துண்டுகளாக நறுக்கி அதில் மசாலாத்தூள், பச்சை மிளகாய்,சிறிதளவு உப்பு (சுவைக்காக மட்டும்) போட்டு அதில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் வெல்லக் கட்டியை உடைத்துப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சவும். அத்துடன் சீனியைக் கலந்து அது நன்கு கரைந்தபின் இந்த பாகை வெந்தமாங்காய் மீது ஊற்றி அடுப்பில் தீயைக் குறைத்து இளகிய பதம் வரும் வரை கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு போட்டு அது வெடித்த பின்னர் உளுந்து, கருவேப்பிலையை போட்டு தாளித்து மாங்காய்பாகு கலவை மீது ஊற்றவும். இனிப்பு புளிப்புசுவையுடன் கூடிய வித்தியாசமான காயல் இனிப்பு ஊறுகாய் ரெடி! இதை எதனோடும் சேர்க்காமல் தனியாக சாப்பிடலாம்.

Tags :
|
|