Advertisement

கேழ்வரகு பூரண கொழுக்கட்டை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sat, 25 Mar 2023 7:06:37 PM

கேழ்வரகு பூரண கொழுக்கட்டை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: கேழ்வரகு பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். ஆரோக்கியம் நிறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2கப்முழு சிறு பயறு - 1/2கப்தேங்காய் துருவல் - 1/2கப்வெல்லம் - 1/2 கப்ஏலக்காய் - 5முந்திரி பருப்பு - 5பாதாம் பருப்பு - 5நெய் - 2 ஸ்பூன்சிறிது உப்பு

cashew nuts,pudding,puran,almonds,cashews ,கேழ்வரகு, கொழுக்கட்டை, பூரணம், பாதாம், முந்திரி

செய்முறை: கேழ்வரகு மாவை சிறிது உப்பு சேர்த்து கொதித்த தண்ணீர் விட்டு கரண்டி கொண்டு கிண்டி ஆற வைக்கவும். ஆறிய பிறகு கை கொண்டு நன்கு பிசைந்து உருட்டி வைத்து கொள்ளவும்.

சிறு பயறை வேகவைத்து அது ஆறிய பிறகு தேங்காய், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெல்லத்தை 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். அதில்அரைத்து வைத்த சிறுபயறு கலவையையும், சிறுசிறு துண்டுகளாக வெட்டிய முந்திரி, பாதாம் பருப்பையும் போட்டு நெய் சேர்த்து நன்கு விரவி உருண்டை பிடித்துகொள்ளவும்.

பின்னர் உருட்டி வைத்த கேழ்வரகு மாவை சப்பாத்திக்கு மாவு எடுப்பது போல் எடுத்து தேய்த்து நடுவில் சிறு பயறு பூரண உருண்டையை வைத்து பொதிந்து உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். மிகவும் சுவையான, சத்தான கொழுக்கட்டை தயார். அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|