Advertisement

ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை

By: Nagaraj Sun, 30 Aug 2020 11:55:40 AM

ருசித்து சாப்பிட அருமையான சுவையில் குருமா செய்முறை

அருமையான சுவையில் அட்டகாசமாக குருமா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் பாராட்டுக்களை அள்ளுங்கள். இதோ செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:

எண்ணெய்-2டீஸ்பூன்
நெய்-2 டீஸ்பூன்
பிரியாணிஇலை-1
வெங்காயம்-1
தக்காளி-1
பட்டை-1
ஏலக்காய்-2
லவங்கம்-3
மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மல்லித்தூள்-2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
கொத்தமல்லி--ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
தேங்காய்-1/4மூடி
முந்திரி-10
பால்-1/2 கப்
தயிர்-2டீஸ்பன்
கேரட், பீன்ஸ், பட்டாணி,
உருளைக் கிழங்கு- தேவைக்கேற்ப

ghee,biryani leaf,onion,tomato ,
நெய், பிரியாணி இலை, வெங்காயம், தக்காளி

செய்முறை: பாத்திரத்தில் நெய் எண்ணெய் விட்டு பிரியாணிஇலை சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் கேரட், பீன்ஸ்,பட்டாணி, உருளைக் கிழங்கு சேர்க்கவும்

மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் , தண்ணீர் தேவையான அளவுக்கு சேர்த்து கொதிக்க விடவும். பட்டை, கிராம்பு, ஏலக்காயை தேங்காயுடன் முந்திரி சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் நன்கு கொதி வந்ததும் அரைத்த தேங்காய்-முந்திரி விழுது சேர்க்கவும்.

தயிர், பால் சேர்த்து கொதிக்க விடவும். மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். அருமையான சுவையில் குருமா குழம்பு ரெடி.

Tags :
|
|