Advertisement

கிராமத்து சுவையில் கேரட் பொறியல் செய்வது எப்படின்னு தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sun, 22 Oct 2023 8:17:05 PM

கிராமத்து சுவையில் கேரட் பொறியல் செய்வது எப்படின்னு தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவோம். அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் கிராமத்து சுவை மாறாமல் பொரியல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையானவை
கேரட் - அரை கிலோதேங்காய் துருவல் - அரை கப்கடுகு - 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்பெருங்காயத்தூள் -1 சிட்டிகைபச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - ஒரு கொத்துஎண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

carrot fries,carrots,grated coconut,mustard,lentils ,கேரட் பொரியல், கேரட், தேங்காய் துருவல், கடுகு, உளுத்தம் பருப்பு

செய்முறை: முதலில் கேரட்டை நீரில் கழுவி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். பின் தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி. அருமையான கிராமத்து சுவையுடன் கேரட் பொரியல் மணக்கும்.

Tags :