Advertisement

ஜிஞ்சர் மோர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Wed, 06 July 2022 4:37:16 PM

ஜிஞ்சர் மோர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: மோர் எப்போதும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். உடலின் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பானங்களில் மோருக்கு முக்கியமான இடம் உண்டு. இதில் இஞ்சி சேர்த்து அருந்தும் போது இன்னும் ஆரோக்கியம் உயரும். அந்த வகையில் ஜிஞ்சர் மோர் எப்படி தயார் செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை: மோர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – 1, இஞ்சி – சிறு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

buttermilk,ginger,asparagus,health,curry leaves , மோர், இஞ்சி, பெருங்காயம், ஆரோக்கியம், கறிவேப்பிலை

செய்முறை:இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

மோருடன் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வையினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங் என்றால் அது ஜிஞ்சர் மோர்தான். ஆரோக்கியத்தையும் உயர்த்தும்.

Tags :
|
|