Advertisement

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Fri, 24 Feb 2023 11:10:06 PM

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்

சென்னை: சுவையாக இருக்கும்... ஆப்பிள் சத்தான உணவு. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஆப்பிளில் பாயாசம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்.

ஆப்பிள்களில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், இதனில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

ஆப்பிள் பாயாசம் செய்வதற்கு எளிதானது. இதற்கு முதலில் 1 லிட்டர் பாலை கொதிக்க விடவும். பால் கொதிக்கும்போது, அவ்வப்போது கிண்டிவிட வேண்டும். பால் கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிடவும். அதன்பிறகு, 2 ஆப்பிள்களை தோலுரித்து துருவிக்கொள்ளவும்

பிறகு அடுப்பில் கடாயை வைக்கவும். அதனில் கொஞ்சமாக நெய் சேர்க்கவும். பின்னர் துருவிய ஆப்பிளை கொட்டி நிறம் மாறும் வரை வறுக்கவும்.

apple,fiber,milk,vitamins,ghee,saffron ,ஆப்பிள், நார்ச்சத்து, பால், வைட்டமின்கள், நெய், குங்குமப்பூ

பால் நன்றாக கெட்டியானதும், துருவிய ஆப்பிளை சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ளவும். பிறகு 150 கிராம் சர்க்கரையை சேர்த்து, குறைந்த சூட்டில் அடுப்பை வைத்து கொதிக்கவிடவும்.

ஒருவேளை ஆப்பிளை நீங்கள் நேரடியாக பால் உடன் சேர்த்தால், அப்போது பால் வெடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், பாலில் அமிலம் உள்ளது. அதனால், ஆப்பிளை முதலில் வறுத்த பின்பே, பாலில் சேர்க்கவும். 5 முதல் 7 நிமிடங்களில், ஆப்பிள் நன்றாக வறுபட்டு தயாராக இருக்கும்

பிறகு முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர் திராட்சையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பால் மற்றும் ஆப்பிள் நன்றாக கொதித்தவுடன், உலர் பழத்தை சேர்க்கவும். இவற்றை சேர்த்த பின், 5 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும். இதனை கொஞ்ச நேரம் ஆறவிட்டு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும். அதன்மீது சிறிது உலர் பழங்களை தூவி அலங்கரிக்கவும். கடைசியாக, குங்குமப்பூ தூவி இறக்கினால், சூடான சுவையான ஆப்பிள் பாயாசம் ரெடி.

Tags :
|
|
|
|