Advertisement

ஓட்டல் சுவையில் வீட்டில் குஸ்கா பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

By: Nagaraj Fri, 11 Nov 2022 8:22:32 PM

ஓட்டல் சுவையில் வீட்டில் குஸ்கா பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

சென்னை: பிரியாணி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஓர் உணவு. சைவம், அசைவம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பிரியாணியின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு.

சைவ பிரியர்கள் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகளை சேர்த்து பிரியாணியை சமைத்து சுவைத்து மகிழ்கின்றனர். மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மக்களுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியம். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விதவிதமான பிரியாணி வகைகள் செய்யப்படுகின்றன.


ஆனால் நாம் என்னதான் முயற்சி செய்தாலும் வீடுகளில் செய்யப்படும் பிரியாணியானது கடைகளில் கிடைக்கும் பிரியாணியைவிட எப்போதும் சுவை குறைவாகவே இருக்கும். எனவே வீட்டிலேயே குஸ்கா பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். பிரியாணி செய்யப்போகும் அரிசியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அதன் பின் கொதிக்க வைக்கவேண்டும். அதன் பிறகு அதில் உள்ள நீரை வடித்து விட்டு அரிசியை பாத்திரத்தோடு சேர்த்து தனியாக வைத்து விட வேண்டும்.

இப்போது குஸ்கா பிரியாணி செய்வதற்கு தேவையான மசாலாக்களை தயார் செய்ய வேண்டும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நெய்யுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

perfect padam,kuska biryani,varieties of gravies,masalas ,சரியான பதம், குஸ்கா பிரியாணி, கிரேவி வகைகள், மசாலாக்கள்

பழுப்பு நிறத்தில் வரும் வரை வதக்கிய பிறகு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் . தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அதனுடன் தேவையான அளவு தயிரை சேர்த்து இன்னும் நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக செய்து முடித்த பின் ஏற்கனவே எடுத்து வைத்த அரிசியை இந்த மசாலாக்கள் அடங்கிய கலவையுடன் சேர்த்து இன்னும் சிறிது நேரம் சமைக்க வேண்டும். சரியான பதத்துடன் வந்ததும் நாம் பாத்திரத்தை இறக்கி விடலாம்.

இப்போது சுவையான தரமான தென்னிந்திய குஸ்கா பிரியாணி தயார். நீங்கள் விரும்பினால் இதனோடு உங்களுக்கு பிடித்த வெங்காய பச்சடி அல்லது வேறேதேனும் கிரேவி வகைகளுடன் சேர்த்து பரிமாறினால் சுவை என்னும் கூடுதலாக இருக்கும்.

Tags :