Advertisement

மட்டன் தலைக்கறி அருமையான சுவையில் செய்வது எப்படின்னு தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Mon, 16 Jan 2023 2:14:24 PM

மட்டன் தலைக்கறி அருமையான சுவையில் செய்வது எப்படின்னு தெரிந்து கொள்வோம்

சென்னை: பொதுவாக மட்டன் தலைக்கறி அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவு வகைகளில் ஒன்றாகும். மட்டன் தலைக்கறி இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

இந்த மட்டன் தலைக்கறி செய்வது மிகவும் சுலபம். அதன் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்ஆட்டு தலை - 1தக்காளி - 2வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்பட்டை - 1கிராம்பு - 2ஏலக்காய் - 2தனியா தூள் - 1/2 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை - சிறிதுகொத்தமல்லி - சிறிதுதேங்காய் துருவல் - 1 கப்.

onion,tomato,coriander,coconut,cumin powder,turmeric powder ,
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, தேங்காய், சீரகத்தூள், மஞ்சள்தூள்

செய்முறை: வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஆட்டு தலை கறியை நன்றாக சுத்தம் செய்து தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 6 விசில் போட்டு வேக விடவும்.

குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பின்பு பரிமாறவும். அருமையான சுவையில் மட்டன் தலைக்கறி ரெடி.

Tags :
|
|