Advertisement

மாம்பழ புளிசேரி செய்வது எப்படி என்று உங்களுக்காக!!!

By: Nagaraj Fri, 24 Mar 2023 09:28:51 AM

மாம்பழ புளிசேரி செய்வது எப்படி என்று உங்களுக்காக!!!

சென்னை: மாம்பழ சீசன் ஆரம்பம் ஆயிடுச்சு. இனி வீடுகளில் அதிகம் மாம்பழம் வாங்குவோம். இதில் சுவையான மாம்பழ புளிசேரி செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவை:
மாம்பழத் துண்டுகள் - 1கப்மிளகாய் தூள் - 1/4 கரண்டிமஞ்சள்தூள் - 1/4 கரண்டிசீரகத்தூள் - 1/4 கரண்டிபுளித்த தயிர் - 1/2 கப்சீனி - 1 கரண்டிஉப்பு தேவைக்கு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 கரண்டிபூண்டு - 2 பல்கறிவேப்பிலை - 3

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2கரண்டிகடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - 1/4கரண்டிவற்றல் - 1கறிவேப்பிலை

mango,cilantro,sugar,cumin,salt,coconut ,மாம்பழம், புளிச்சேரி, சீனி, சீரகத்தூள், உப்பு, தேங்காய்

செய்முறை: தோல் நீக்கிய மாம்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், மிளகாய் தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். கொதி வந்ததும் பட்டுப் போல் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு தேங்காய் வாடை அடங்கும் வரை சிம்மில் வைத்து கொதிக்கட்டும்.

அத்துடன் தயிர் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து மாம்பழம் இனிக்கவில்லை என்றால் ஒரு கரண்டி சீனி சேர்க்கவும். பின்னர் அதில் தாளித்து கொட்டவும். சுவையான மாம்பழ புளிச்சேரி ரெடி.

Tags :
|
|
|
|