Advertisement

ருசி மிகுந்த சில்லி முட்டை கிரேவி செய்யலாமா... வாங்க!!!

By: Nagaraj Mon, 17 Oct 2022 10:20:42 PM

ருசி மிகுந்த சில்லி முட்டை கிரேவி செய்யலாமா... வாங்க!!!

சென்னை: வீட்டில் முட்டை மற்றும் சோயா, தக்காளி, சில்லி சாஸ்கள் இருந்தால், அவற்றைக் கொண்டு சுவையான சில்லி முட்டை கிரேவி செய்யலாம். இந்த சில்லி முட்டை கிரேவி ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் மற்றும் ப்ளைன் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 5
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
வினிகர் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோளா மாவு - 1 டீஸ்பூன் (சிறிது நீரில் கலந்து வைத்துக் கொள்ளவும்)
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு

chilli eggs,green chillies,ginger,garlic,oil,chilli powder ,சில்லி முட்டை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எண்ணெய், மிளகாய் தூள்

செய்முறை: முதலில் ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு முட்டை துண்டை எடுத்து பேஸ்ட் செய்து வைத்துள்ள கலவையில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டைகளையும் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து சாஸ்களையும் சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, சிறிது நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அதன் பின் நீரில் கலந்து வைத்துள்ள சோளமாவை ஊற்றி, சாஸ் சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, பொரித்த முட்டைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சில்லி முட்டை கிரேவி தயார்.

Tags :
|
|
|