Advertisement

செம சைட்டிஷ் சேனைக்கிழங்கு சுக்கா வருவல் செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Fri, 25 Aug 2023 10:09:51 AM

செம சைட்டிஷ் சேனைக்கிழங்கு சுக்கா வருவல் செய்வோம் வாங்க!!!

சென்னை: சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ் என்றால் அது சேனைக்கிழங்கு சுக்கா என்று உங்கள் குடும்பத்தினர் ரசித்து சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்யலாம்.

தேவையானவை:சேனைக்கிழங்கு – 1/4 கிலோசின்ன வெங்காயம் – 10பெரிய வெங்காயம் – 2தக்காளி – 3 [அரைத்துக் கொள்ளவும்]சோம்பு – 1/4 டீஸ்பூன்பூண்டு – 1காய்ந்த மிளகாய் – 4மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்கறி மசாலா – 1/2 ஸ்பூன்உடைத்த கடலை – 2 டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்உப்பு- தேவைக்கு ஏற்பஎண்ணெய் – தேவைக்கு ஏற்ப

onion,elephant yam,healthy,sidish,vegetable,yam sukka, ,அரைத்த தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள்

செய்முறை: முதலில் சேனைக்கிழங்கை , சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் போட்ட பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய் , சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா தூள் சேர்க்க வேண்டும்.

இதனுடன் அரைத்த தக்காளி, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கொதித்த பின் சேனை கிழங்கைச் சேர்த்து தேங்காய்த் துருவல் மற்றும் உடைத்த கடலை தூள் தூவி இறக்கினால் டேஸ்டியான சேனைக்கிழங்கு சுக்கா தயார்

Tags :
|
|