Advertisement

வாழைக்காய் பொடிமாஸ் செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:55:59 AM

வாழைக்காய் பொடிமாஸ் செய்வோம் வாங்க!!!

சென்னை: வாழைக்காய் வாய்வு என்று ஒதுக்குபவர்கள் கூட இப்படி சுவையான வாழைக்காய் பொடிமாஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் = 3 பீஸ்
தேங்காய் = 1/4 மூடி
வெங்காயம் = 200 கிராம்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
காய்ந்தமிளகாய் = 3 பீஸ்
கறிவேப்பிலை = சிறிய கொத்து

banana,coconut,onion,salt , எண்ணெய், தேங்காய், வாழைக்காய், வெங்காயம்

செய்முறை: முதலில் வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு அகலமான கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.


நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை வதக்கி வாழைக்காயை சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வாழைக்காய் வெந்து வெங்காயம், மிளகாயுடன் சேர்ந்து நன்கு காந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும். இதை சாதத்தில் கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Tags :
|
|