Advertisement

அருமையான சுவையில் காலிபிளவர் குருமா செய்வோம் வாங்க

By: Nagaraj Wed, 18 Oct 2023 6:22:35 PM

அருமையான சுவையில் காலிபிளவர் குருமா செய்வோம் வாங்க

சென்னை: காலிபிளவர் குருமா... சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு போன்ற உணவு வகைகளுக்கு தொட்டு கொள்ள சுவையான காலிபிளவர் குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்காலிபிளவர் – 1பச்சை‌ப்பட்டாணி – 50 கிராம்கேரட் – 2தக்காளி – 2வெங்காயம் – 2இஞ்சி – சிறிய துண்டுபூண்டு – 1தேங்காய் – 1 முடிபச்சைமிளகாய் – 5சோம்பு, கடுகு, உ.பரு‌ப்பு – 1/2 ஸ்பூன்பட்டை, ‌பி‌ரி‌ஞ்‌சி இலை – சிறிதளவுகருவேப்பிலை மல்லித்தழை – சிறிதளவுஎண்ணெய் – 3 ஸ்பூன்உப்பு – தேவையான அளவு

cauliflower,carrots,tomatoes,onions,ginger, ,காலிபிளவர், கேரட், தக்காளி, வெங்காயம், இஞ்சி

செ‌ய்முறை: காலிபிளவரை உப்பு கலந்த கொதிநீரில் போட்டு எடுக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய், கேரட்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய், பச்சை மிளகாய், கசகசாவைப் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடேறியதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலையைப் போட்டு தாளி‌த்து, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய், கேரட், பட்டாணி, காலிபிளவரைப் போட்டு வதக்கி, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் அரைத்த தேங்காயையும் ஊற்றி மல்லித்தழையை கிள்ளிப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும். சுவையான காலிபிளவர் குருமா ரெடி!

Tags :
|
|