Advertisement

சுவையான சிக்கன் வடை செய்வோம் வாங்க: குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

By: Nagaraj Sat, 11 Nov 2023 09:21:44 AM

சுவையான சிக்கன் வடை செய்வோம் வாங்க: குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

சென்னை: சிக்கனில் பல சுவையான ரெசிபிகளை சுவைத்து மகிழ்ந்திருப்பீர்கள். அந்தவகையில் சுவையான சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்சிக்கன் - 150 கிராம்சின்ன வெங்காயம் - 50 கிராம்கரம் மசாலா - 1 ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுபிரட் தூள் - 150 கிராம்முட்டை - 1எண்ணெய் - தேவையான அளவு

chicken vada,bread powder,ginger garlic paste,egg ,சிக்கன் வடை, பிரட் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், முட்டை

செய்முறை: முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு சிக்கனை மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வேளை கருவை மட்டும் ஊற்றி கொள்ளவும். பின்பு ஒரு பிளேட்டில் பிரட் தூளை வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த சிக்கன் வடை தயார்!

Tags :