Advertisement

அருமையான சுவையில் மாங்காய் சாதம் செய்வோமா..!

By: Nagaraj Thu, 03 Nov 2022 8:34:27 PM

அருமையான சுவையில் மாங்காய் சாதம் செய்வோமா..!

சென்னை: வெறும் மாங்காயை சாப்பிட யோசிக்கிறீங்களா. அப்போ டக்குன்னு இந்த ரெசிபிய செய்து கொடுங்க… குழந்தைகளுக்கு அவ்ளோ பிடிக்கும். ஆமாங்க மாங்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்க. எப்படி செய்யலாம். இதோ செய்முறை.

தேவையான பொருட்கள்:

சாதம் – ஒரு கப்
கிளிமூக்கு மாங்காய் – 3
கடுகு – 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன்

mango rice,coriander leaves,coconut,oil,chillies ,மாங்காய் சாதம், கொத்தமல்லி தழை, தேங்காய், எண்ணெய், மிளகாய்

செய்முறை: முதலில் பாத்திரத்தில் உதிரியாக வடித்த சாதத்தை எடுத்து கொள்ளவும். பின்பு இனிப்பான கிளிமூக்கு மாங்காயை எடுத்து, மெல்லியதாக தோல் நீக்கியதும், உதிரியாக துருவிக் கொள்ளவும். பின்னர் தேங்காயை எடுத்து உதிரியாக துருவி நன்கு கொள்ளவும்.

மேலும் மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், கடுகு போட்டு நன்கு மென்மையாக அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும். அதனை அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகை போட்டு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுத்ததும், அதனுடன் துருவிய மாங்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

மேலும் வதக்கிய மாங்காய் கலவையுடன், அரைத்த மசாலா கலவை, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து சில நன்கு கிளறிதும் அதனுடன் வடித்த சாதம்,சிறிது உப்பு தூவி நன்றாகக் கிளறி விடவும். இறுதியில் நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவி இறக்கி, பரிமாறினால் ருசியான மாங்காய் சாதம் ரெடி.

Tags :
|