Advertisement

அருமையான சுவையில் புதினா புலாவ் செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Fri, 08 Sept 2023 7:22:18 PM

அருமையான சுவையில் புதினா புலாவ் செய்வோம் வாங்க!!!

சென்னை: இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் கீரைகளையும் கேரட், பீன்ஸ் மற்றும் பீட்ரூட் போன்ற அனைத்து வகையான காய்களைச் சாப்பிடுவது நல்லது. வீட்டிலேயே அருமையான முறையில் புதினா புலாவ் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - ஒரு கப்புதினா - ஒரு கப்வெங்காயம் – ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)கேரட், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டுபூண்டு - 7 பல்பச்சை மிளகாய் - 4உப்பு - தேவையான அளவுதண்ணீர் - ஒன்றரை கப் (அ) ஒன்றே முக்கால் கப்

தாளிக்க
பிரியாணி இலை - ஒன்றுகிராம்பு - 2பட்டை - 3 சிறிய துண்டுஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

mint pulao,onion,garlic,carrot,tomato ,புதினா புலாவ், வெங்காயம், பூண்டு, கேரட், தக்காளி

செய்முறை: புதினாவுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும். அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

அதனுடன் வெங்காயம், கேரட், தக்காளி, பீன்ஸ் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.

Tags :
|
|
|