Advertisement

முருங்கைப்பூவில் அருமையாக ரசம் செய்வோம் வாங்க

By: Nagaraj Sat, 28 Jan 2023 9:55:46 PM

முருங்கைப்பூவில் அருமையாக ரசம் செய்வோம் வாங்க

சென்னை: முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். அந்த வகையில் முருங்கை பூ ரசம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
நெல்லி அளவு - புளி1 - தக்காளி2 கைப்பிடி அளவு - முருங்கை பூ1/2 டீஸ்பூன் - மிளகு5 பல் - பூண்டு1 டீஸ்பூன் - சீரகம்1/4 டீஸ்பூன் - வெந்தயம்1 - வற்றல்கருவேப்பிலை, மல்லி தழை - சிறிது1/4 டீஸ்பூன் -மஞ்சள் தூள்

pepper,cumin,salt,moringa flower,turmeric powder,aloe vera ,மிளகு, சீரகம்,உப்பு, முருங்கைப்பூ, மஞ்சள் தூள், பெருங்காயம்

செய்முறை: புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் மிளகு கலவை, கருவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின் பிசைந்த தக்காளி சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

Tags :
|
|
|