Advertisement

சுவையான வடை தயாரிப்போம் மீல் மேக்கரில்...!

By: Nagaraj Mon, 30 Oct 2023 10:12:47 PM

சுவையான வடை தயாரிப்போம் மீல் மேக்கரில்...!

சென்னை: மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் மீல் மேக்கரை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 100 கிராம்பொட்டுக் கடலை மாவு - அரை கப்பெரிய வெங்காயம் - 1கரம் மசாலா - ஒரு தேக்கரண்டிகறி மசாலா - ஒரு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டிசோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டிமஞ்சள் தூம் - கால் தேக்கரண்டிசோள மாவு - ஒரு தேக்கரண்டிகொத்தமல்லி - சிறிதளவுபுதினா - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய், உப்பு - தேவையான அளவு

meal maker,vada,cumin powder,curry masala,garam masala ,மீல் மேக்கர், வடை, சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா

செய்முறை: வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல் மேக்கரை சுடுதண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

Tags :
|