Advertisement

அசத்தல் சுவையோடு தீபாவளி ஸ்பெஷல் அரிசி முறுக்கு செய்வோம் வாங்க!!!!

By: Nagaraj Fri, 03 Nov 2023 3:23:09 PM

அசத்தல் சுவையோடு தீபாவளி ஸ்பெஷல் அரிசி முறுக்கு செய்வோம் வாங்க!!!!

சென்னை: தீபாவளியை சிறப்பிப்பதில் பலகாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில் தீபாவளி ஸ்பெஷல் அரிசி முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை
புழுங்கல் அரிசி – 2 கிலோகடலை மாவு – 500 கிராம்பொட்டுக்கடலை – 500 கிராம் (அரைத்து வைக்க)எள்ளு – தேவையான அளவுஓமம் – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவுவெண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவுகருவேப்பிலை – தேவையான அளவுசீரகம் – 1 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் – தேவையான அளவு

diwali,special,rice twist,balakaram ,தீபாவளி,ஸ்பெஷல்,அரிசி முறுக்கு,பலகாரம்

செய்முறை: அரிசியை ஊற வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும், அதனுடன் கடலை மாவு, அரைத்து வைத்த பொட்டுக்கடலை சேர்த்து கலக்க வேண்டும். மிளகாய், சீரகம், உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவுடன் அவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு எள்ளு, ஓமம் (கைகளில் அழுத்தி தேய்த்தது) சேர்த்து கலக்க வேண்டும். வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலக்கினால் போதுமானது.

கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு பிழியும் (முறுக்கு பிடியில்) சுற்றி எடுத்துக்கொண்டு பொறிக்கலாம். பக்குவாமாக சராசரி சூட்டில் (அடுப்பு நெருப்பில்) மொறுமொறுப்பான, சுவையான அரிசி முறுக்கு தயார் செய்யலாம்.

Tags :
|