Advertisement

ஆஹா வாசனையே மயக்குதேன்னு ருசித்து சாப்பிட நெய் குஜிலி செய்வோமா!!!

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:34:55 PM

ஆஹா வாசனையே மயக்குதேன்னு ருசித்து சாப்பிட நெய் குஜிலி செய்வோமா!!!

சென்னை: சுவையான நெய் குஜிலி செய்து பார்ப்போமா. அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நாமும் செய்து பார்ப்போம்.

தேவையானவை:

மைதாமாவு - 4 கப்
நெய் - 100 கிராம்
பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 4 1/2 கப்
பால் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

baking soda,milk,oil,milk powder,maida ,சமையல் சோடா, பால், எண்ணெய், பால் பவுடர், மைதா

செய்முறை: மைதா மாவை சலித்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சமையல் சோடா, பால், சிறிது எண்ணெய், பால் பவுடர் ஆகியவற்றை கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

பிசைந்த மாவை பெரிய வட்டமாக தேய்த்து சிறிய வட்ட அச்சியை வைத்து சிறு அப்பளங்களாக நறுக்கவும். ஒவ்வொரு அப்பளத்தின் நடுவிலும் கத்தியால் மூன்று இடத்தில் கீறி விடவும். பின்னர் சூடான எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையை போட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கம்பி பதத்தில் வரும் போது இறக்கி விடவும். சர்க்கரை பாகில் பொரித்த அப்பளங்களை போட்டு மூழ்க விட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும். சுவையான நெய் குஜிலி ரெடி.

Tags :
|
|