Advertisement

இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா பூ பச்சடி செய்வோமா!!!

By: Nagaraj Mon, 16 Jan 2023 9:07:11 PM

இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா பூ பச்சடி செய்வோமா!!!

சென்னை: இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா பூ பச்சடி செய்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையான பொருட்கள் :
கோங்குரா பூ இதழ்கள் – 1 கப்பச்சை மிளகாய் – 6வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்சீரகம் - ½ டீ ஸ்பூன்எள் - 2 டீ ஸ்பூன்பெருங்காயப் பொடி – சிறிதுஎண்ணெய் – 3 டீ ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்ப

tart,cardamom,oil,tamarind,rice,iron ,பச்சடி, கருவேப்பிலை, எண்ணெய், புளிப்பு, சாதம், இரும்புச்சத்து

செய்முறை: கோங்குரா பூவின் உள்ளே உள்ள காயை எடுத்து விட்டு இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விடாமல் எள்ளை வறுத்து தனியே வைக்கவும். பிறகு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெந்தயம், சீரகம், பெருங்காயத் தூள்,போட்டு பொரிந்தவுடன் பச்சை மிளகாய்களைப் சேர்த்து நன்கு வதக்கி தனியே வைக்கவும்.

அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் கோங்குரா பூ இதழ்களைப் போட்டு வதக்கும் போதே சுருள வதங்கி விடும். ஆறியவுடன் எள்ளுடன் வதக்கிய பொருட்கள் உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.

பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலையை எண்ணெயில் தாளித்து அரைத்த பச்சடியில் சேர்க்கவும். இது புளிப்பும் காரமுமாக சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். நமக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும் உணவு இது.

Tags :
|
|
|