Advertisement

சூப்பர் சுவையில் வாழைக்காயை வைத்து கிரேவி செய்வோம் வாங்க

By: Nagaraj Wed, 08 Mar 2023 7:51:53 PM

சூப்பர் சுவையில் வாழைக்காயை வைத்து கிரேவி செய்வோம் வாங்க

சென்னை: வாழைக்காயில் அதிகபட்சமாக பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :
வறுத்து அரைக்க :கட்டி பெருங்காயம் - 1 துண்டுகாய்ந்த மிளகாய் - 5துவரம் பருப்பு -1/2 tspதனியா - 2 tspசோம்பு - 1 tspதேங்காய் துருவல் - 1 கைப்பிடி
குழம்பு செய்ய :
வாழைக்காய் - 1எண்ணெய் - 2 tspகடுகு - 1/2 tspசீரகம் - 1/2 tspவெங்காயம்- 1தக்காளி - 1பெருங்காயத்தூள் - 1/4 tspமஞ்சள் - 1/4 tspஇஞ்சி - 1 துண்டுபூண்டு - 4 பற்கள்உப்பு – தேவையான அளவு

banana,gravy,salt,masala paste,onion,ginger,garlic ,வாழைக்காய், கிரேவி, உப்பு, மசாலா விழுது, வெங்காயம், இஞ்சி, பூண்டு

செய்முறை: முதலில் வறுத்து அரைக்க தயார் செய்துகொள்ளுங்கள். அதற்கு தேங்காய் துருவல் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

அரைக்கும்போது தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். கண்ணாடி பதம் வந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

பின் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறி வேக வையுங்கள். கொஞ்சம் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து கொதிக்க வையுங்கள்.

நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் வாழைக்காய் கிரேவி தயார்.

Tags :
|
|
|
|
|