Advertisement

ஓட்டல் சுவையில் சிக்கன் கபாப் வீட்டிலேயே செய்வோமா!!!

By: Nagaraj Thu, 20 Oct 2022 11:08:01 PM

ஓட்டல் சுவையில் சிக்கன் கபாப் வீட்டிலேயே செய்வோமா!!!

சென்னை; குடும்பத்தினர் அனைவரும் ஓட்டல் சுவையில் சிக்கன் கபாப் சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா. அப்போ என்ன இதோ செய்முறை. செய்து கலக்குங்கள்.

தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ, தயிர் – 1/2 கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மிளகு தூள் – 1 டீஸ்பூன், சாட் மசாலா – 1 டீஸ்பூன், கேசரி பவுடர் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு

chicken recipe,chicken-kebab,kebab recipe,non veg recipe,snack ,சிக்கன், சிக்கன் கபாப், மசாலா, எலுமிச்சை சாறு, சாட், சிக்கன் துண்டுகள்

செய்முறை : முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து முள் ஸ்பூனால் நன்றாக சிக்கனை நன்றாக குத்தி விட வேண்டும். ஒரு பௌலில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரி பவுடர், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிக்கனை போட்டு கலந்த வைத்த பேஸ்ட்டை தடவி, ஒரு மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஊறவைத்த சிக்கனை உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து, பிரட்டி வைக்க வேண்டும். அடுத்து, அந்த துண்டுகளை கிரில் மிஸினில் வைத்து, சிக்கன் துண்டுகளை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இறுதியில் அதன் மேல் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, மீண்டும் ஒரு நிமிடம் கிரில் மிஸினில் வைத்து எடுத்து பரிமாற சுவையான சிக்கன் கபாப் தயார்.

Tags :