Advertisement

சூப்பர் சுவையில் மசாலா டால் பூரி செய்வோம் வாங்க

By: Nagaraj Mon, 04 Sept 2023 09:28:05 AM

சூப்பர் சுவையில் மசாலா டால் பூரி செய்வோம் வாங்க

சென்னை: டால் பூரி எப்படி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யலாம். தொட்டுக்கொள்ள ஒரு ரைத்தா இருந்தால் போதும். பெரும்பாலும் நம் எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக கோதுமை மாவில், மைதா மாவில் பூரி செய்வது வழக்கம். அதேபோல கொஞ்சம் வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: கடலைபருப்பு-200 கிராம் ரவை- 50 கிராம் பூண்டு-3 பல் இஞ்சி- ஒரு துண்டு சீரகம்- 1/2 ஸ்பூன் சோம்பு- 1/2 ஸ்பூன் கஸ்தூரி- மேத்தி 1/2 ஸ்பூன் முழு மிளகு- 5 கிராம்பு- 2 பெருங்காயம்- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன் ஓமம்- ஒரு சிட்டிகை கோதுமை மாவு-200 கிராம் எண்ணெய்- அரை லிட்டர் உப்பு- சுவைக்கேற்ப கொத்தமல்லிதழை-அலங்கரிக்க

chickpeas,semolina. garlic,cumin,anise. kasturi- methi ,கடலைபருப்பு, ரவை. பூண்டு, சீரகம், சோம்பு. கஸ்தூரி- மேத்தி

செய்முறை: நமக்கு முதலில் 1/2 கப் அளவு கடலைப்பருப்பு தேவை. முந்தைய நாள் இரவே 1/2 கப் அளவு கடலைப்பருப்பை சுத்தமாக கழுவி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வையுங்கள். 8 மணி நேரம் கடலை பருப்பு ஊறட்டும். மறுநாள் காலை மிக்சி ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து போடவும்.

இதோடு பூண்டு தோல் உரித்தது 3 பல், இஞ்சி 1 இன்ச் தோல் சீவியது, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி 1/2 ஸ்பூன், முழு மிளகு 5, கிராம்பு 2, பெருங்காயம் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், போட்டு நைசாக விழுதாக அரைக்க வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதை ஒரு அகலமான பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இதோடு ௨ டேபிள் ஸ்பூன் ரவையை போட்டு நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். ரவை அரைத்த கடலைமாவில் நன்றாக ஊறிவிடும்.

பிறகு இதோடு கோதுமை மாவு 2 கப், தேவையான அளவு உப்பு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், ஓமம் சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு போட்டு நன்றாக மாவை பிசைய வேண்டும். மாவு கட்டியாக பூரி மாவு பதத்தில் பிசைய வேண்டும்.

மாவு கொஞ்சம் லூசாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இந்த மாவை ஒரு ஈரத்துணி போட்டு மூடி வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் வழக்கம் போல குட்டி குட்டி பூரிகளை கொஞ்சம் தடிமனாக திரட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் நன்றாக சூடானதும் பூரியை போட்டு பொறித்து எடுத்தால் ஆஹா இதன் வாசமும் சுவையும் வேற லெவல்ல இருக்கும்.

Tags :
|