Advertisement

பரங்கிக்காய் புளிக்கறி செய்வோமா... ருசியில் மயங்கிடுவோமா!!!

By: Nagaraj Wed, 02 Nov 2022 4:03:12 PM

பரங்கிக்காய் புளிக்கறி செய்வோமா... ருசியில் மயங்கிடுவோமா!!!

சென்னை: பரங்கிக்காய் புளிக்கறி செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையானவை: பரங்கிக்காய் – 1 கீத்து, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப் பூண்டு – 4, வரமிளகாய் – 4, சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 இணுக்கு, வெல்லம் – சிறு துண்டு.

parangikai,sambar powder,tamarind,onion,garlic ,பரங்கிக்காய், சாம்பார் பொடி, புளி, வெங்காயம், பூண்டு

செய்முறை:- பரங்கிக்காயை விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டை உரித்து இரண்டாக வெட்டிக் கொள்ளவும். புளியை உப்புப் போட்டு அரைகப் தண்ணீரில் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் வெள்ளைப் பூண்டைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும் பரங்கிக்காயைக் கழுவிச் சேர்க்கவும்.

இரண்டு நிமிடங்கள் வதக்கி சாம்பார் பொடி போட்டு புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். நன்கு கிளறி விட்டுக் கொதி வந்ததும் அடக்கி வைத்து மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வேக விடவும். வெந்ததும் இறக்குமுன் வெல்லம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

Tags :
|