Advertisement

சேனைக்கிழங்கு-சென்னா புளிக்குழம்பு செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Fri, 19 May 2023 4:34:31 PM

சேனைக்கிழங்கு-சென்னா புளிக்குழம்பு செய்வோம் வாங்க!!!

சென்னை: சேனைக்கிழங்கு-சென்னா புளிக்குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை:8 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்தபிரவுன் கலர் கொண்டை கடலை - 150 கிராம்தோல் சீவி சற்று பெரிய சைஸில்நறுக்கிய சேனைக்கிழங்கு - 200 கிராம்உரித்த சின்ன வெங்காயம் - 8பச்சை மிளகாய் - 2உரித்த பூண்டுப்பல் - 10தக்காளி - 22 இணுக்கு கறிவேப்பிலைசின்ன எலுமிச்சை அளவு புளிஎண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்கடுகு - 1 டீஸ்பூன்வெந்தயம் - 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்கறி பவுடர் - 1½ டீஸ்பூன்½ கப் தேங்காய்ப்பால்உப்பு & தண்ணீர் - தேவையான அளவு.

chickpeas,sweet potato,gravy,relish,salt,turmeric powder ,கொண்டைக்கடலை, சேனைக்கிழங்கு, குழம்பு, ருசி, உப்பு, மஞ்சள் தூள்

செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்க்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் சேனை கிழங்கை போடவும். அதனுடன் தக்காளியை நறுக்கிப் போட்டு அரை நிமிடம் கிளறி விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மூடி வைத்து வேக விடவும். கிழங்கு வெந்ததும் புளியை கரைத்து விட்டு, கறி பவுடர் சேர்த்து சிறு தீயில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும். பின் தேங்காய்ப்பால் சேர்த்து, எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கிவிடவும். சுவையும் சத்தும் நிறைந்த குழம்பு தயார்.

Tags :
|
|
|