Advertisement

சூப்பர் சுவையில் நெல்லை மீன் குழம்பு செய்து பார்ப்போமா!!!

By: Nagaraj Wed, 28 Dec 2022 11:39:09 AM

சூப்பர் சுவையில் நெல்லை மீன் குழம்பு செய்து பார்ப்போமா!!!

சென்னை: அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம். இது மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு தாறுமாறான சுவையில் இந்த மீன் குழம்பு இருக்கும்.

தேவையான பொருட்கள்: ½ கிலோ குழம்பு மீன், 1 மூடி தேங்காய், 50 கிராம் சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள், ½ ஸ்பூன் மஞ்சள் தூள், எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவைக்கேற்ப, புளி சிறிதளவு, 1 ஸ்பூன் மிளகு தூள், ஸ்பூன் சீரகம்

coconut oil,fish broth,curry leaves,tomatoes,sour cream ,தேங்காய் எண்ணெய், மீன் குழம்பு, கறிவேப்பிலை, தக்காளி, புளிக்கரைசல்

செய்முறை: முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். பிறகு மீனை சுத்தம் செய்துகொள்ளவும். மிக்சியில் தேங்காய், மிளகு, சீரகம், 2 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும், அதனுடன் தூள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, புளிக்கரைசல், அரைத்த தேங்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்த பிறகு மீன்களை போடவும். மீன் வெந்து குழம்பு கெட்டியானதும், இறக்கி வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு மூடி விட்டால் குழம்பு காமகமனு இருக்கும், சுவையாகவும் இருக்கும்.

Tags :