Advertisement

அசத்தல் சுவையில் தக்காளி குழம்பு செய்வோம் வாங்க!!!

By: Nagaraj Sat, 11 Nov 2023 09:18:31 AM

அசத்தல் சுவையில் தக்காளி குழம்பு செய்வோம் வாங்க!!!

சென்னை: தக்காளியை வைத்து அசத்தல் சுவையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்தக்காளி 1/4 கிலோசிறிய வெங்கயம் 100 கிராம்பச்சை மிளகாய் 10கறிவேப்பிலை 1 கொத்துஎண்ணெய் 4 தேக்கரண்டிமிளகாய்த் தூள் 2 1/2 தேக்கரண்டிமல்லித் தூள் 1 1/2 தேக்கரண்டிதேங்காய் துருவல்கடுகு 1 தேக்கரண்டிஉப்பு தேவையான அளவு

tomatoes,chilli powder,coriander powder,coconut milk,broth ,தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேங்காய் பால், குழம்பு

செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலை உரித்து எடுத்துக் கொள்ளவும். உரித்த பழங்களை நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும். துருவிய தேங்காவில் கெட்டியாக பால் எடுத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாய் மற்றும் சிறிய வெங்காயத்தை அரிந்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போடவும். கடுகு வெடித்ததும் வெட்டிவைத்த வெங்கயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.

வதக்கிய பிறகு தேங்காய் பால் பிசைந்து வைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மல்லித்தூளையும் போட்டுக் கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து கெட்டி தேங்காப்பாலை ஊற்றவும். இறுதியாக தேவைக்கேற்ப உப்பு போட்டு எண்ணெய் மிதந்ததும் குழம்பை இறக்கவும். சுவையான தக்காளி குழம்பு தயார்.

Tags :