Advertisement

உடலுக்கு சக்தி தரும் உளுந்து புட்டு செய்வோம் வாங்க.

By: Nagaraj Sat, 25 Mar 2023 7:06:25 PM

உடலுக்கு சக்தி தரும் உளுந்து புட்டு செய்வோம் வாங்க.

சென்னை: உடலுக்கு சக்தி தரும் உளுந்து புட்டு செய்வோம் வாங்க. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:
தோல் நீக்கிய உளுந்து - 1கப்புழுங்கல் அரிசி - 1/2 கப்தேங்காய் துருவல் - 2கப்பனங்கற்கண்டு பொடி - 1/4 கப்உப்பு - தேவையான அளவு

stone crab,pudding,gram flour,grated coconut,aroma ,கற்கண்டு, புட்டு, உளுந்து, தேங்காய் துருவல், வாசனை

செய்முறை: உளுந்தையும், அரிசியையும், தனித்தனியாக வாணலியில் இட்டு பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து கொள்ளவும். பின்னர் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு புட்டு மாவு பதத்திற்கு திரித்து கொள்ளவும்.

பிறகு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து கலந்து வைத்து விட்டு, பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் கலந்து புட்டுக்கு விரவுவது போல் விரவிக்கொள்ள வேண்டும். அதில் தேங்காய் திருவையும் சேர்த்து விரவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் புட்டு குழலில் போட்டு ஆவியில் வேக விடவும். வேகும் போதே நல்ல வாசனையாக இருக்கும். வெந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்து கற்கண்டு தூள் சேர்த்து விரவி சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

Tags :