Advertisement

கடலை மாவை வைத்து ஈஸியான முறையில் பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போமா

By: vaithegi Sun, 19 Nov 2023 3:37:11 PM

கடலை மாவை வைத்து ஈஸியான முறையில் பாம்பே சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போமா

மிக்ஸி இல்லாத நேரங்களில் சட்னி செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் கடலை மாவை வைத்து ஈஸியான முறையில் பாம்பே சட்னி செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 6 ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், உளுந்து – 1/4 ஸ்பூன், பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 4, வர மிளகாய் – 2, கருவேப்பிள்ளை – 2 இருக்கு, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வெங்காயம் – 3, தக்காளி – 3, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், தேங்காய் – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், கொத்தமல்லி – சிறிது, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – தேவையான அளவு.

bombay chutney,peanut flour ,பாம்பே சட்னி ,கடலை மாவு


செய்முறை:
ஒரு பவுலை எடுத்து அதில் கடலைமாவை போட வேண்டும். அந்த கடலை மாவிற்கு தேவையான உப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி படாத வண்ணம் கரைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு போன்றவற்றை ஒன்றின் பின் ஒன்றாக போட வேண்டும். கடுகு வெடித்ததும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய் மற்றும் கருவேப்பிள்ளையை போட வேண்டும். பூண்டு சிறிது வதங்கியதும் பெருங்காயத்தூளை சேர்க்க வேண்டும்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சிறிது வெந்ததும் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் இவற்றை சேர்க்க வேண்டும். வெங்காயமும் தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை அதில் ஊற்ற வேண்டும். கடலை மாவு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும். பிறகு நெய்யை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விட வேண்டும். கடலை மாவு கொதித்தவுடன் கெட்டியாகும் என்பதால் அதற்கு தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும். கடலை மாவின் பச்சை வாசனை போகும் அளவிற்கு நன்றாக கொதிக்க வைத்து இறக்கும்பொழுது சிறிது கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும்.இப்பொது சுவையான பாம்பே சட்னி ரெடி.

Tags :