Advertisement

தஹி மிக்ஸ்ட் கோல் வடா செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

By: Nagaraj Sun, 11 June 2023 11:19:29 PM

தஹி மிக்ஸ்ட் கோல் வடா செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க

சென்னை: தஹி மிக்ஸ்ட் கோல் வடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையானவை: நல்ல கெட்டித் தயிர் – 3 கப், சுத்தம் செய்த பொடி கோதுமை ரவை – 2 கப், மிளகு – சீரகப் பொடி – 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, இஞ்சி – 1 துண்டு, ஃப்ரெஷ் கொத்துமல்லி இலை – 1 கப், ரீஃபைண்டு ஆயில் – ¼ லிட்டர், தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்ப் பூ – 1 கப், உப்பு – தேவையானது.

green chillies,ginger,coriander leaves,kol vada,curd,semolina ,பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி இலை, கோல் வடா, தயிர், ரவை

செய்முறை: முதலில் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்துமல்லி இலை ஆகியவைகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு மெல்லிய துணியில் கெட்டித் தயிரை விட்டு, கட்டித் தொங்கவிட, தண்ணீர் வடியும். பிறகு அதை ஒரு பாத்திரத்தில் போடவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்ப் பூ, சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தயிரில் கலந்து கொள்ளவும். பிறகு பெருங்காயப் பொடி, மிளகு – சீரகப் பொடி, கோதுமை ரவை, தேவையான உப்பு, கொத்துமல்லி இலை ஆகியவைகளையும் தயிரில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும். ரவை தயிரில் ஊறி விட, கெட்டியாக வடை மாவு பதத்தில் இருக்கும்.

அடுப்பில் வாணலியை வைத்து, ரீஃபைண்டு ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்துவிட்டு காய விடவும். இதில் தயார் செய்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறு சிறு பந்து போல உருட்டி நான்கு நான்காக மெதுவாகப் போட்டு பொன்னிறமாக வெந்தபின் வெளியே எடுக்கவும். கம கம வாசனையுடன் சுவையாக இருக்கும். இந்த ஸ்பெஷல் கோல் வடாவிற்கு, சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

Tags :
|
|